நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் , வெள்ளநீரால் விழுப்புரம் -செஞ்சி இடையிலான சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த தருணத்தில் , நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கனமழை வெள்ளத்தால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; “சென்னையில் மழைநீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்”..!! மின்வாரியம் அறிவிப்பு..!!