நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இந்த வருடம் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஜனவரி 4ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
அதே சமயம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21ஆம் தேதி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.