தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில், TANGEDCO-வின் #Safeதீபாவளி | மின் கம்பங்கள் அருகில் மற்றும் மின் கம்பிகள் செல்லும் பாதையில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்கவும். பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளனர். அதேபோல் TANGEDCO மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ (UPI) வாயிலாக ரசீது பதிவிறக்கம் செய்யலாம். தீபாவளி சமயத்தில் மறக்காமல் பில் கட்டவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் வாட்ஸ் அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* மின் கட்டணம் 500 தாண்டும் பட்சத்தில் தானாக பதிவு செய்யப்பட்ட போன் எண்களின் வாட்ஸ் அப்களுக்கு பில் அனுப்பப்படும்.
* அப்படி இல்லாத பட்சத்தில் வாட்ஸ் அப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு இருக்கும்.
* இந்த பில் கட்டணத்தில் க்யூஆர் கோடு இருக்கும். இதை கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ சாதனங்களில் ஸ்கேன் செய்தால் தானாக அதன் மூலம் பணம் செலுத்திவிட முடியும்.
இதற்கிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக ‘மின் தடை’ இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.