சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் குடிநீர் வாரியம் சார்பாக வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2023-24 ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு 5%, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான கட்டணத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.