2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 12ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 9ஆம் தேதியும், 10ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதியும் தொடங்கின. இதையடுத்து எஞ்சிய வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது. இடையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வடக்கு உள் மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் சில மாவட்டங்களில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டது. இவை நாளைய தினம் (டிசம்பர் 21, சனி) நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக டிசம்பர் 23ஆம் தேதி உடன் அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுகிறது. இதையடுத்து டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் விடுமுறையை அடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வியாழன் அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால், 2024 ஆம் ஆண்டில் பள்ளி செயல்படும் கடைசி நாள் நாளை தான்.. விடுமுறையையொட்டி மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Read more ; Alert…! 4 மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை…. சற்றுமுன் வானிலை கொடுத்த எச்சரிக்கை..!