fbpx

புரட்டி எடுக்கும் கனமழை..!! வரும் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது. நேற்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்தது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. ஆனாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் 208.46 மீட்டரை தாண்டியுள்ளது.

இதனால் டெல்லியின் தாழ்வான பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிவில் லைன் ஏரியாவில் ரிங் சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மஞ்சு கா திலாவை ஜம்மு காஷ்மீர் கேட் உடன் இணைக்கும் பகுதி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மழை நின்ற பின்னரும், டெல்லிக்கு ஏன் இந்த ஆபத்து? என்ற கேள்வி எழுந்துள்ளது. யமுனை ஆறு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியதாகும்.

இந்தப் பகுதியில் மழை பெய்தால் வெள்ளம் யமுனை ஆற்றுக்கு வந்து சேரும். தற்போது உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்வதால், அங்கிருந்து வெள்ளம் யமுனை ஆற்றில் கலக்கிறது. இதனால், ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

மேலும் தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் பாதுப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளர். இதுவரை இல்லாத அளவிற்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. டெல்லி வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு ஜூலை 16ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மாநில அரசு.

Chella

Next Post

ஓரினச்சேர்க்கையால் நேர்ந்த விபரீதம்..!! கெஞ்சிப் பார்த்த பெற்றோர்..!! கிணற்றில் குதித்து தற்கொலை..!!

Fri Jul 14 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கபாலி மகன் கார்த்திக் (21). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (22) என்பவர் பணிபுரிந்து வந்தார். லோகேஷ், கார்த்திக்கின் உறவினர் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி நாளடைவில் அது ஓரினச்சேர்க்கை வரை சென்றுள்ளது. கடந்த சில […]

You May Like