fbpx

புரட்டி எடுக்கும் கனமழை..!! தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட வார்னிங்..!! இந்த லிஸ்ட்டில் உங்க மாவட்டமும் இருக்கா..?

கோடை காலத்திற்கு இடையில் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இன்று அதிகாலை தீவிர கனமழை பெய்தது. திடீரென்று 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது. சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 9 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மழை மேகங்கள் சென்னையை விட்டு செல்கின்றன. மிக தீவிர மழை மேகங்கள் தற்போது திருப்பூர் – கோயம்புத்தூர் பெல்ட் நோக்கி செல்கிறது. அங்கே மிக தீவிரமான மழையை எதிர்பார்க்கலாம். திருப்பூரில் மிக மிக கனமழை பெய்யும். கன்னியகுமரியிலும் மிக தீவிர கனமழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று ஒரு மாவட்டத்தை மட்டும் தனித்து குறிப்பிடுவது கடினம். இன்று மழை பெய்யும் மாவட்டங்களின் லிஸ்ட் மிக மிக மிக பெருசாக இருக்க போகிறது. இந்த மழையை முடிந்தவரை அனுபவித்து மகிழுங்கள். மே மாதத்தின் 2-வது பாதியில் நல்ல வெப்பத்தை எதிர்கொள்வோம், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் இன்று கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீடு தேடி வரும் வங்கி சேவை..!! எப்படி பெறுவது..?

Tue May 2 , 2023
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, வங்கி சேவைகள் முகவர்கள் மூலமாக வீடு தேடி வந்தும் வழங்கப்படுகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் துறை வங்கிகள் வரை டோர் ஸ்டேப் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. […]

You May Like