தொடர் கனமழை பெய்துவருவதால் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் யமுனையில் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாயக் குறி 205.33 மீட்டராகவும் உள்ளது. இதற்கிடையில், கனமழை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் டெல்லியில் யமுனை நதி 203.58 மீட்டர் உயர்ந்துள்ளது. இது இன்று 205.5 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், யமுனையில் நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்று வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. யமுனா நதியில் நீர்மட்டம் 206 மீட்டர் அளவை கடந்தால், ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்குவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.