fbpx

நவ.8இல் முழு சந்திர கிரகணம்..!! வெறும் கண்களால் பார்க்கலாமா..? விஞ்ஞானிகள் சொல்வது என்ன..?

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதி நிகழ இருக்கிறது.

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் நிகழக்கூடும். இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதி நிகழ இருக்கிறது. முழுசந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் 2-வது கிரகணம் ஆகும். இதற்கிடையே, சந்திரன் ஒரு ரத்த நிலவாக இருக்கும்.

நவ.8இல் முழு சந்திர கிரகணம்..!! வெறும் கண்களால் பார்க்கலாமா..? விஞ்ஞானிகள் சொல்வது என்ன..?

இவை முழு சந்திர கிரகணத்தின்போது நிகழ்கிறது. இந்த முழு சந்திரகிரகணத்தை கொல்கத்தா உட்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் காணமுடியும். எஞ்சிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணத்தை மட்டும் பார்க்க இயலும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு துவங்கி மாலை 6.19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும். முழுசந்திர கிரகணத்தை பார்க்க உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஏராளமான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காணமுடியும். அக்டோபர் 25ஆம் தேதி ஒருபகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. வருகிற நவம்பர் 8ஆம் தேதி வரும் முழு சந்திரகிரகணம் இந்த வருடத்தின் கடைசி முழு சந்திரகிரகணம். அடுத்த முழு சந்திரகிரகணம் 2023ஆம் வருடம் அக்டோபர் 28ஆம் தேதி காணமுடியும்.

Chella

Next Post

மக்களவை உறுப்பினர் உறவினர்கள் 12 பேர் மோர்பி விபத்தில் பலி !!

Mon Oct 31 , 2022
குஜராத்தில் நடந்த பாலம் விபத்தில் ராஜ்காட் மக்களவை உறுப்பினர் மோகன்குந்தரியாவின் உறவினர்கள் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்காட் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராக மோகன் குந்தரியா உள்ளார். இவரின் உறவினர்களும் நேற்று நடந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றிப் பார்க்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். உயிரிழந்த 12 பேரில் 5 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் ஆவர். […]

You May Like