மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது. https://ssc.nic.in – என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
SSC Constable Post’, Apply என்பதை கிளிக் செய்யவும் முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும் புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.