fbpx

சற்றுமுன்…! சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து..! 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து. விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்‌. பவானிசாகர் அணை காட்சி முனை அருகே நிகழ்ந்த விபத்தில் சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பவானிசாகர் அணை காட்சி முனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Vignesh

Next Post

வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்காதீங்க..!! இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா..?

Sat May 4 , 2024
காலையில் எழுந்தவுடன், நாம் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு உணவை உட்கொள்கிறோம். மக்களிடையே நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் காலையில் பழச்சாறுடன் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நாளை தொடங்க விரும்புகிறோம். காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் நீண்ட […]

You May Like