fbpx

சுற்றுலாப் பயணிகளே..!! நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த போதிலும் ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் வருடந்தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழா துவங்கியுள்ளது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் 12-வது காய்கறிகள் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 6ஆம் தேதி துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட பறவைகள் விலங்குகளின் உருவங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.

இதையடுத்து மே 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்பட்டது. மே 13 முதல் 15ஆம் தேதி வரை உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இந்நிலையில், புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது. மே 19 முதல் 23 வரையிலான 5 நாட்களில் பிரசித்தி பெற்ற, மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் லட்சக்கணக்கான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகின்ற ஜூன் 3 ஆம் தேதியன்று பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இனி அலுவலகங்களுக்குள் மது அருந்தலாம்’..!! ஜூன் 12ஆம் தேதி முதல் அமல்..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!!

Fri May 19 , 2023
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது. நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையானது ஜூன் மாதம் […]

You May Like