fbpx

பென்ஸ் காருடன் மோதிய விபத்தில் இரண்டு ’பீஸ்’ ஆன டிராக்டர் …

திருப்பதி அருகே பென்ஸ் காருடன் டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் இரண்டு ’பீஸ்’ ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பைபாஸ் சாலையில்இந்த விபத்து ஏற்பட்டது. மேஸ்ஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டரும் பென்ஸ் காரும் மோதி விபத்திற்குள்ளாது. இந்த விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதிலும் டிராக்டர் ஓட்டுனர் லோசான காயங்களுடன் உயிர்தப்பினர். டிராக்டரும் – பென்ஸும் மோதிக்கொண்ட வேகத்தில் டிராக்டர் இரண்டு துண்டானது.. பென்ஸ் காரின் முன்பக்கம் நசுங்கியது. இதனால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் பென்ஸ் கார் விபத்திற்குள்ளாவது வாடிக்கையாளர்களை அதிரச்செய்துள்ளது. உயர்ரக கார்களை வாங்குபவர்கள் பெரும்பாலம் விபத்தை தவிர்க்கும் சிறப்பு அம்சங்கள் இந்த காரில் இருப்பதாலேயே இது போன்ற கார்களை தேடிப்பிடித்து வாங்குகின்றனர்.

தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சென்று விபத்திற்குள்ளான மெர்செடஸ் பென்ஸ் கார் தரமற்ற கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன. ஜெர்மன் வாகன உற்பத்தி நிறுவனமும் – இந்தியாவின் சொகுசு கார் விற்பனை நிறுவனமும் இணைந்து விபத்திற்கான காரணத்தை அறிய ஹாங் காங்கில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது சைரஸ் மிஸ்திரி சீட்பெல்ட் அணியவில்லை. இதுதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.  முன்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் உயிர் தப்பிய நிலையில் பின்னால் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அதே ரக சொகுசு கார் விபத்தில் சிக்கி வைரலாகி வருகின்றது. இதனால் காரின் தரம் குறித்த கேள்விகள் இணையதளத்தில் தொடர்ந்து ஒலிக்கின்றது. இருந்தாலும் டிராக்டர் இரண்டுதுண்டான நிலையில் கார் முன்பக்கம் லேசான சொட்டையுடன் ’’கன் ’’ போல் நிற்கின்றது. இதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் இந்த ரக கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இது வலு சேர்த்துள்ளது.

அதே நேரத்தில் மேஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டர் பேசுபொருளாகியுள்ளது. அதே நேரத்தில் ஒரு சம்பவத்தை வைத்து இதன் தரத்தை தீர்மானிக்க முடியாது.. சாலை விதிகள் பாதுகாப்புவிதிகள் கடைபிடிக்காமல் போனாலும் இந்த சம்பவங்கள் நிகழலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

Next Post

வீட்டில் தயாரிக்கும் ஜுஸ் உங்கள் பாதிப்பை கூட சரிசெய்துவிடும்… உங்களுக்கு தெரியுமா ?

Wed Sep 28 , 2022
வீட்டில் தயாரிக்கும் ஜுஸ் இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் கீல்வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இயற்கையாகவே உடலைக் குணப்படுத்தவும், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் சிறந்த வழி உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சில எளிமையான முறையில் வீட்டில் தயாரிக்கும் […]

You May Like