fbpx

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே நடந்த பாரம்பரிய பாரிவேட்டை நிகழ்ச்சி…

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் வழிபாடு தொடங்கியது. இதையொட்டி காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சியான பாரிவேட்டை மாலையில் நடந்தது. இதில், ஒருவர் புலி வேடம் அணிந்திருந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்து, முண்டாசு கட்டியபடி கைகளில் கம்பு, ஈட்டியுடன் வந்து புலி வேடம் அணிந்தவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து பாரிவேட்டை நிகழ்ச்சியை தத்ரூப காட்சியை அரங்கேற்றினர்.

பண்டைக்காலத்தில் அந்த பகுதி, அடர்ந்த வனமாக இருந்ததால் கிராம மக்கள் தங்களது பாதுகாப்புக்காக விலங்குகளை வேட்டையாடியதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். திருவிழாவில் அக்கரைபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Maha

Next Post

ஒரு நாளில் யுபிஐ இத்தனை முறை தான் ஸ்கேனிங்... மீறினால் என்ன நடக்கும்...?

Wed Jun 14 , 2023
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. […]

You May Like