fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. நாளை ஒரு நாள் மட்டும்…! சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு..!

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகரம் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டாவது நிழற்சாலையில் 28-ம் தேதியன்று ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இரண்டாவது நிழற்சாலையில் ப்ளூ ஸ்டார் சந்திப்பு முதல் இரண்டாவது நிழல் சாலை மற்றும் மூன்றாவது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் ப்ளூ ஸ்டார் சந்திப்பில் ஐந்தாவது நிழல் சாலையில் இடது புறமாக திரும்பி ஆறாவது நிழற்சாலை கே4 பிஎஸ் ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி ரவுண்டானாவிற்கு செல்ல வேண்டும்.

திருமங்கலத்தில் இருந்து அமைந்தகரை ஈவேரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ப்ளூ ஸ்டார் சந்திப்பில் ஐந்தாவது நிழற்சாலையில் வலது புறம் திரும்பி நான்காவது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும். ப்ளூ ஸ்டார் சந்திப்பில் ஐந்தாவது நிழற்சாலையில் இருந்து (ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி மார்க்கத்தில்) இரண்டாவது நிழற்சாலைக்கு (அண்ணா நகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து ஐந்தாவது நிழற்சாலையில் நேராக சென்று நான்காவது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Traffic has been changed in Chennai tomorrow due to the Happy Street event.

Vignesh

Next Post

’No’ சொன்னாலும் விட மாட்டாரு..!! தொல்லை கொடுத்துட்டே இருப்பாரு..!! வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது பகீர் புகார்..!!

Sat Jul 27 , 2024
பாடகி சின்மயி சினிமா துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி நீண்டகாலமாக பேசி வருகிறார். பல பிரபலங்கள் பற்றியும் அவர் இதுவரை புகார் கூறியுள்ளார். தற்போது பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய் பற்றி பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாரை சின்மயி தனது தளத்தில் பகிர்ந்துள்ளார். “நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப்கள் மற்றும் பப்களுக்கு ரெகுலராக வருகிறார். அங்கு அவர் பெண்களிடம் […]

You May Like