fbpx

போக்குவரத்து நெரிசல்..!! பள்ளி பேருந்துகளுக்கு அதிரடி உத்தரவு..!! காலை 8.15 மணி வரை தான் டைம்..!!

பள்ளி வாகனங்கள் காலை 8.15 மணிக்குள் மாணவர்களை பள்ளிக்குள் இறக்கி விட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்..!! பள்ளி பேருந்துகளுக்கு அதிரடி உத்தரவு..!! காலை 8.15 மணி வரை தான் டைம்..!!

இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும், காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் நிறுத்த அனுமதி கிடையாது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி பேருந்துகள் மாணவர்களை காலை 8.15 மணிக்குள் இறக்கி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்...! எத்தனால் கலந்த பெட்ரோல் விலை உயர்வு...! மத்திய அரசு ஒப்புதல்...!

Sat Dec 3 , 2022
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ‌. டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரை சர்க்கரை பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளை அடிப்படையாகக் கொண்ட மூலப் பொருட்களிலிருந்து பெறப்படும். எத்தனாலுக்கான அதிகபட்ச விலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான […]

You May Like