சென்னையில் கர்ப்பிணி ஒருவர் சென்ற ஆட்டோவை வழிமறித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் செலுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுனரிடம் தடாலடியாக பேசியது வைரலாகி வருகின்றது.
சென்னை பெரம்பூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு12 மணி அளவில் ஆட்டோ ஒன்றை செம்பியம் போக்குவரத்து எஸ்.ஐ. பால முரளி என்பவர் வழிமறித்துள்ளார். ’’நோ , என்ட்ரியில் வந்ததற்காக ரூ.1500 எடு ’’ என போலீசார் ஓட்டுனரை கேட்டுள்ளார். நோ என்ட்ரி பலகை எதுவும் இங்கு இல்லையே என ஆட்டோ ஓட்டுனர் பதில் அளித்துள்ளார். இருந்தாலும் அபராதத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் ஓட்டுனரை கீழே இறக்கி விதாண்டாவாதம் செய்துள்ளார்.

’’ஆட்டோவில் , கர்ப்பிணி ஒருவர் இருக்கின்றார். அவசரத்திற்காக நான் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு வழி விடுங்கள் நான் அபராதம் எதையும் செலுத்த முடியாது. எதற்காக கேட்கின்றீர்கள் நோ என்ட்ரி என்ற எந்த பலகையும் இல்லை என கூறியுள்ளார்.
எதற்கும் செவிமடுக்காத பால முரளி ’’ 1500 ரூபாயை எடு என்பது போல நே என்ட்ரி 1500 ரூபாய் பைன் , நே என்ட்ரி 1500 ரூபாய் பைன் , நோ என்ட்ரி 1500 ரூபாய் பைன் ’’ தொடர்ந்து குரலை உயர்த்தி பேசியுள்ளார். சார் நீங்க குடிச்சிருக்கீங்களா ஏன் இப்படி சத்தமாக பேசுகின்றீர்கள் , எனஓட்டுனர் கேட்க என் குரலே அப்டிதான் எடு 1500ரூபாய் . என கூறும் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.