அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மெர்சி்ட கவுண்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் கடத்தப்பட்டனர். 8 மாத குழந்தை உள்பட ஜஸ்லீன் கவுர் , அவரது தந்தை ஜஸ்தீப் சிங் (36) அவரது மாமா அமதீப் சிங் (39 ) ஆகியோர் கடத்தப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளன். ஆயுதம் ஏந்திய இரண்டு பேர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணை தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர்களை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் எனவும் இதுவரை தெரியவில்லை. கடத்தல் விவகாரத்தில் உள்நோக்கம் இருப்பதாகவோ, காரணம் குறித்தோ இதுவரை துப்பு கிடைக்கவில்லை. எனினும் இது குறத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது