சத்தீஸ்கரின் பெமேதரா மாவட்டத்தில் மக்கள் பயணித்த சரக்கு வாகனம், சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இது விபத்தின் காரணமாக 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம், பத்தரா கிராமத்தைச் சேர்ந்த சிலர், திரைய்யா கிராமத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சரக்கு வாகத்தில் சென்றுள்ளனர். இரவு விழாவை முடித்துவிட்டு திரும்பிய பொது திரும்பிய போது, கதியா கிராமத்திற்கு இருக்கே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6) மற்றும் ட்விங்கிள் நிஷாத் ( 6) ஆகிய 3 மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் முதலில் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, படுகாயமடைந்த 4 பேர் ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டனர்.