fbpx

சோகம்!. பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் காலமானார்!

RIP: இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பால் திங்கள்கிழமை கொல்கத்தாவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருக்கு வயது 78.

உஷா உதுப் இந்திய அளவில் பிரபலமான பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் இசையில் பாடியிருக்கிறார். 1960களிலிருந்து தொடர்ந்து பாடிவரும் அவருக்கு இந்திய அளவில் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தனது இசை பயணத்தை சென்னையிலிருந்துதான் தொடங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது. பாடகியாக மட்டுமின்றி மன்மதன் அம்பு உள்ளிட்ட சில படங்களிலும் உஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் இறந்துவிட்டதாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Readmore: ‘பாரிஸ் ஒலிம்பிக் 2024’!. பி.வி.சிந்து, ஷரத் கமல் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி செல்வார்கள்!.

English Summary

Usha Uthup’s Husband Jani Chacko Uthup Dies at 78 After Cardiac Arrest

Kokila

Next Post

நெல்லை தீபக் ராஜா இறுதி ஊர்வலம்.. லிஸ்ட் போட்டு தூக்கும் போலீஸ்!! - சீமான் கண்டனம்

Tue Jul 9 , 2024
Naam Tamilar Party Coordinator Seeman asserted that the police department is arresting the youths who attended Deepak Raja's funeral and they should be released.

You May Like