தமிழ்நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரின் காளை காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.
ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில் காளையின் உயிர் பிரிந்தது. முன்னதாக வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் முட்டிக்கொண்டதில் அப்பு என்பவரின் காளை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! 18, 19ஆம் தேதிகளில் சம்பவம் இருக்கு..!!