சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறு ஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராப் நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிவிப்பில்; சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறுஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த ஒழுங்கு முறைக்கான வரைவு வழிகாட்டுதல்கள் 24.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்த கருத்துக்களை தொடர்புடையவர்கள் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் பல்வேறு தரப்பினர் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி தொழில் துறையினர் மே 1-ம் தேதி கருத்துக்களை தெரிவிக்க கடைசி நாளாகும்.