fbpx

ஒடிசா ரயில் விபத்து…..! சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழக அமைச்சர்கள்….!

ஒடிசாவின் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்து இருக்கின்ற நிலையில், இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதேபோல இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து காரணமாக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உதவியை விரைந்து செய்திட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஒரிசாவிற்கு விரைந்தார் என்ற செய்தி வெளியானது.

ஆனால் தற்போது மற்றும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, உதயநிதி மட்டும் செல்லவில்லை அவருடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களும் ஒரிசாவிற்கு சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருப்பதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் மீட்புப்பணிகளில் உடன் இருந்து தமிழகத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்திட இரு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரிசாவிற்கு விரைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

Next Post

ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவு….! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Sat Jun 3 , 2023
ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நிறைவடைந்து இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. உடனடியாக விபத்து நடைபெற்ற பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீட்பு பணி மற்றும் சீரமைப்பு பணிகளில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே சென்னைக்கு வருகை தந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உட்பட […]

You May Like