fbpx

’அடுக்குமாடி குடியிருப்புக்குள் ரயில் சேவை’..!! இது எங்கு இருக்கு தெரியுமா..? வாயை பிளக்க வைக்கும் வீடியோ..!!

சீனாவின் மைய பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான நகரம் Chongqing. இங்கு சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆகையால், இது உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நகரம் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் நெரிசல்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவமான ஈர்ப்பை கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் ரயில் போக்குவரத்து தான். நகரங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் வேலைக்கு செல்ல மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது வழக்கமான ஒன்று. அது சாலைகளின் மேலே செல்லும். ஆனால், தென்கிழக்கு சீனாவின் Chongqing-ல் மக்கள் பயன்படுத்தும் மோனோ ரயில் பாதை முற்றிலும் வித்தியாசமாக 19 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் வழியே செல்கிறது.

ஆம், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் வழியே செல்லும் மோனோ ரயில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல உயரமான கட்டிடங்களை கொண்டிருப்பதற்காக “மவுண்டைன் சிட்டி” என்று அழைக்கப்படும் Chongqing பெருநகரம் 31,000 சதுர மைல்களுக்குள் மில்லியன் கணக்கான மக்களைக் கொண்டுள்ளது. எனவே, இந்த நகரத்தின் தனித்துவமான நிலப்பரப்பு மற்றும் அதிக கட்டுமான அடர்த்தி காரணமாக, ரயில்வே எஞ்சினியர்ஸ் மற்றும் சிட்டி பிளானர்ஸ், ஒரு முக்கிய மோனோரயில் பாதையை உருவாக்க ஒரு தனித்துவ வழியை செயல்படுத்த வேண்டியிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்த போது 2 ஆப்ஷன்கள் மட்டும் தான் இருந்தன. ஒன்று மோனோ ரயில் பாதைக்காக முழுஅடுக்குமாடி கட்டிடத்தையும் ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்துவது அல்லது 2 ஃப்ளோர்களை மட்டும் க்ளீன் செய்து ரயில் செல்ல ஏதுவாக ஒரு tunnel-ஐ உருவாக்குவது. வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும் நிபுணர்கள் 2-வது ஆப்ஷனையே தேர்வு செய்தனர்.

எனவே, இந்த ரயில் அதன் இயக்கத்தின் போது சுமார் 60 டெசிபல் சத்தத்தை மட்டுமே உருவாக்கும் என்பதால் குடியிருப்பாளர்கள் ஒலி மாசுபாடு பற்றி அச்சம் அல்லது கவலைப்பட தேவையில்லை. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நடுவில் மோனோ ரயில் ரயில் கடந்து செல்வது உங்களுக்கு வித்தியாசமாக இல்லை என்றால், மற்றுமொரு சுவாரசிய தகவலை உங்களுக்கு சொல்கிறோம். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு பேசேஞ்சர் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டுள்ளது. 19 அடுக்குமாடி கட்டிடத்தின் 6-வது மற்றும் 8-வது தளங்களுக்கு இடையில் இந்த மோனோரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் புதுமையான வடிவமைப்பு மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த நகரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை சேமித்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களால் சூழப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நடுவில் பயணிகள் மோனோ ரயிலில் ஏறலாம் மற்றும் இறங்கலாம். மேலும், இந்த கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடு இருக்கும் அதே கட்டிடத்தில் மோனோ ரயிலில் பயணிப்பதற்கான வசதியை பெற்றுள்ளார்கள்.

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை..!! முழு விவரம் உள்ளே..!!

Fri Mar 31 , 2023
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவியின் பெயர்: அலுவலக ஓட்டுநர் காலியிடங்கள் எண்ணிக்கை: பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் (Light motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான […]

You May Like