fbpx

செம வாய்ப்பு…! தமிழக அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..! யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்..?

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 14.02.2024 முதல் 16.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 14.02.2024 முதல் 16.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. தொலைபேசி / கைபேசி எண்கள்: 044-22252081, 22252082, 8668102600, 8668100181, 7010143022.

Vignesh

Next Post

அதிர்ச்சி!… அதிகம் போன் பார்ப்பதால் குழந்தைகள் முரட்டு தனமாக வளர்ச்சி அடைகின்றனர்!… மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஆபத்து!

Sun Feb 11 , 2024
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு மக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இதனால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூ டியூப் வீடியோ, சமூக வலைதளங்கள் என அதிக நேரம் […]

You May Like