சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் திருநங்கையை, குழந்தைகளை கடத்துபவர் என்று தவறாக எண்ணி, அவரை சிலர் தாக்கியுள்ளனர். அந்த திருநங்கை அரை நிர்வாணமாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பேரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டையில், 25 வயதுடைய, பம்மல் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவர் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு ஆண்கள் அவர் மீது சந்தேகம் கொண்டு விசாரிக்க தொடங்கினர்.
அப்போது தான் ஒரு மென் பொறியாளர் என்று அவர் கூறினார். அதை நம்ப மறுத்த அந்த இருவரும், அந்தத் திருநங்கையை குழந்தையை கடத்த வந்தவர் என்று தவறாக எண்ணினர். அந்தத் தெருவில் உள்ள மின்கம்பத்தில், அந்தப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி கட்டி வைத்தனர்.
அருகில் இருந்த சில ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கத் தொடங்கினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நந்தகுமார் (24) மற்றும் முருகன் (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் காவல் அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English summary: A transgender woman woking in IT was mistaken to be a child kidnapper and was brutally attacked by men in Chennai.
Read More: பகீர்.! மகனுக்கு கஞ்சா சப்ளை.! பெற்றோரை கையும் களவுமாக அமுக்கிய காவல்துறை.!