Trump: திருநங்கைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், முதல் உத்தரவாக அமெரிக்காவில் ஆண், பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே என்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் மாற்று பாலினத்தவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான தடை விதிக்கப்படும் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்களை பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், திருநங்கைகள் இனி பெண்கள் விளையாட்டு போட்டியில் விளையாட தடை விதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக்கிற்கு முன்னதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு டிரம்ப் ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். “அமெரிக்கா திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஒலிம்பிக்குடன் தொடர்புடைய அனைத்தையும் அவர்கள் மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஐ.ஓ.சி-க்கு தெளிவுபடுத்த வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். 2028 ஒலிம்பிக்கிற்கான ஏற்பாட்டாளர்கள் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
Readmore: நெல்லூர் பசுவிற்கு கிடைத்த மவுசு!. ரூ.40 கோடிக்கு விற்பனை!. கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல்!