தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், முதல்கட்டமாக 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநர் நடைமுறை தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஓட்டுநர் நடைமுறை தேர்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறாமல் தகுதியானவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.