தென்காசி சுரண்டை பகுதியில் அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டை பேருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து வந்தது. அப்போது மாணவர்கள் படியில் நிற்க கூடாது என நடத்துனர் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பேருந்துகளை இயக்க மாட்டோம் என தெரிவித்தனர். அரசு பேருந்து ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்துனர், ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்கிய மாணவர் யாரென அடையாளம் தெரியாத சூழ்நிலையில், அவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு வார்த்தையின் போது காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தற்போது ஓட்டுநர்கள், நடத்துனர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மற்றொரு சம்பவத்தில், மது அருந்திய 17 வயது சிறுவன் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நடத்துநர் அந்த சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த சிறுவன், கத்திரிக்கோளால் நடதுனரை தாக்க முயன்றுள்ளார். இதனால் நடத்துநரின் இடது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் சம்வங்களை கருத்தில் கொண்டு, அரசு பேருந்து ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி, ஓட்டுனர்களும், நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more : ‘UNITED BY UNIQUE’ இந்த ஆண்டிற்கான புற்றுநோய் தினத்தின் கருப்பொருள்.. AI பங்கு என்ன..? – மருத்துவர் விளக்கம்