fbpx

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு!. 2 தீவிரவாதிகள் சிக்கியதாக தகவல்!. தேடுதல் வேட்டையில் ராணுவ விரர்கள் தீவிரம்!

Terrorists: ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பல நாட்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது யாத்ரீகர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டனர் மற்றும் ஜூன் 10 அன்று ரியாசியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்தநிலையில், வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அரகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மாநில காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

வனப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றதையடுத்து, “பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும்” பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், ம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

ஜம்மு பிரிவில் பூஜ்ஜிய பயங்கரவாத திட்டம் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடைந்த வெற்றிகளை பிரதிபலிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதுமையான வழிமுறைகள் மூலம் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் ஒரு முன்மாதிரியாக மாற உறுதிபூண்டுள்ளதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.

Readmore: பன்னூனைக் கொல்ல சதி!. குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு!

English Summary

Army opens fire after suspicious movement in Kashmir’s Bandipora, two terrorists believed to be trapped

Kokila

Next Post

உலகின் மிக உயரமான செனாப் பாலத்தில் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!. இந்திய ரயில்வே பெருமிதம்!

Mon Jun 17 , 2024
Railways conduct first trial run of world's highest Chenab rail bridge in Jammu-Kashmir

You May Like