fbpx

பயணிகளே இனி ருசியா சாப்பிடலாம்..!! இந்த உணவகங்களில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக நிறுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், சென்னையில் இருந்து நெல்லை கோவை, நாகர்கோவில், செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்தில் மட்டுமே உணவு அருந்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் வேலூர், வேப்பம்பள்ளி, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் சரவணபவன் உணவகத்தில் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் பயணிகள் 1800 5991 500 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • ஹோட்டல் அரிஸ்டோ : திருச்சியிலிருந்து சென்னை விக்கிரவாண்டி, விழுப்புரம் செல்லும் பேருந்துகள்.
  • ஹோட்டல் ECR IN : பாண்டிச்சேரியிலிருந்து சென்னை, கடப்பாக்கம், செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள்
  • ரமேஷ் ஹோட்டல் : தூத்துக்குடியிலிருந்து மதுரை, மேலகரந்தை செல்லும் பேருந்துகள்.
  • ஸ்ரீ ஆனந்தபவன் கிருஷ்ணகிரி: பெங்களூருவில் இருந்து பில்லனகுப்பம், கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள்.
  • JP ஹோட்டல்: சென்னையிலிருந்து வேலூர், பாலுசெட்டிசத்திரம், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள்.

Chella

Next Post

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய இப்படி ஒரு ஈஸியான வழி இருக்கா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Apr 13 , 2023
இன்றைய காலகட்டத்தில் அன்றாட பொருட்கள் வாங்குவது முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்தையும் கையில் இருக்கும் ஒரு செல்போன் மூலம் இணையதளத்திலேயே மக்கள் முடித்து விடுகிறார்கள். இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி Indane, Bharth petroleum, HP GAS வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலமாக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். Indane கேஸ் வாடிக்கையாளர்கள் செல்போனில் 75888 […]

You May Like