fbpx

பயணிகளே இதை கவனிச்சிருக்கீங்களா..? ரயில் பெட்டிகள் ஏன் இந்த நிறங்களில் இருக்கிறது..? சுவாரஸ்ய தகவல்..!!

இந்திய ரயில்வே தான் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் ஆகும். ஆசியாவின் 2-வது பெரிய நெட்வொர்க்காகவும், உலகிலேயே 4-வது பெரிய நெட்வொர்க்காகவும் இந்திய ரயில்வே இயங்கி வருகிறது. சரக்கு ரயில், பாசஞ்சர் வண்டி முதல் அதிவிரைவு ரயில் வண்டி வரை என்று பலவிதமான ரயில்களும் அன்றாடம் இயக்கப்படுகின்றன.

இதில் ரயில் பெட்டிகள் வெவ்வேறு நிறத்தில் காணப்படும். உதாரணமாக, நீங்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்திருக்கிறீர்கள் என்றால் அந்த ரயிலின் வண்ணங்கள் மெரூன் மற்றும் சந்தன நிறங்களில் இருக்கும். அதிலேயே ஒரு சிலர் ரயில் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருக்கும். சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிவப்பு நிறத்திலும், சில ரயில்கள் நீல நீலத்திலும் இருக்கும். ரயில் பெட்டிகளுக்கு ஏன் வெவ்வேறு வண்ணங்கள் பூசப்படுகிறது தெரியுமா..? அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலான ரயில் வண்டிகளின் பெட்டிகள் அனைத்துமே நீல நேரத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீல நிறத்தில் உள்ள கோச்சுகள் அனைத்துமே ஐசிஎஃப் கோச்சுகள் ஆகும். இந்த கோச்சுகள் மணிக்கு 70 – 140 கிமீ வேகத்தில் செல்லும். இவை இரும்பால் உருவாக்கப்பட்டவை. மேலும், நீல நிற கோச்சுகள் மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் பயன்படுத்தப்படும். இந்திய ரயில்வேயின் சிவப்பு நிற பெட்டிகள் அனைத்துமே லிங்க் ஹாப்மேன் புஷ் என்று கூறப்படுகிறது.

இந்த வகையான பெட்டிகள் ஜெர்மனியில் இருந்து 2000இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு முன்பு வேறு சில நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு வந்த சிவப்பு நிற பெட்டிகள் அனைத்துமே தற்போது பஞ்சாபில் உள்ள கபூர்தலா என்ற இடத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. சிவப்பு நிற ரயில் பெட்டிகள் அலுமினியத்தால் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையான பெட்டிகள் மற்ற கோச்சுகளை விட எடை குறைவாக இருக்கும்.

இது லைட் வெயிட்டாக இருப்பதால், மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயங்கும். தொலை தூர ரயில்களான ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்கள் மிகவும் வேகமாக செல்வதற்கு சிவப்பு நிற கோச்சுகள் பயன்படுத்தப்படுகிறது. மலிவு விலையில் ஏசி கோச்சுகள் உள்ள வண்டி கரிப் ராத் என்று அழைக்கப்படுகிறது. பச்சை நிற ரயில் பெட்டிகள் கரிப் ராத் ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாடு உட்பட மீட்டர் காஜ் ரயில்களில் பச்சை மற்றும் பிரவுன் நிற பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட மீட்டர் கேஜ் இல்லாமல் போய்விட்டது.

Read More : வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி..!! நோட்டமிட்ட மர்ம நபர்..!! திடீரென உள்ளே புகுந்து பாலியல் பலாத்காரம்..!!

English Summary

Do you know why train coaches are painted in different colors..? You can see about it in this post.

Chella

Next Post

பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகை உடனே வழங்க வேண்டும்...! அன்புமணி கோரிக்கை

Sun Oct 27 , 2024
Subsidy should be given to milk producers immediately

You May Like