fbpx

கவனம்…! TRB இடைநிலை ஆசிரியர் தேர்வு… ஹால் டிக்கெட் வெளியானது…!

2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்; 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 21.07.2024 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 26,510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 02.07.2024 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English Summary

TRB Intermediate Teacher Exam… Hall Ticket Released

Vignesh

Next Post

யூரோ 2024!. நெதர்லாந்து அணி வெற்றி!. 3-0 கணக்கில் ருமேனியா தோல்வி!

Wed Jul 3 , 2024
Euro 2024!. Netherlands team win! Romania lost 3-0!

You May Like