fbpx

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட புதையல்!… கடலில் வீசிய கொள்ளையர்கள்!… 12 கிலோ தங்கத்தை மீட்ட கடற்படை!

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக ராமேஸ்வரம் மண்டபத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையத்து, நேற்றிரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையிலிருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் நாட்டுப்படகை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர்

. அப்போது படகில் இருந்த நபர்கள் ஒரு மூட்டையை நடுக்கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதுகுறித்து படகில் இருந்த 3 பேரிடம் விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த கடற்படையினர், ஸ்கூபா டிரைவிங் வீரர்கள் உதவியுடன் அந்த மர்மப் பொருளை இந்திய கடற்படை அதிகாரிகள் தேடி வந்தனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடலில் வீசப்பட்டது ரூ.7.5 கோடி மதிப்பிலான 12 கிலோ கடத்தல் தங்கம் என்பது தெரியவந்தது.

Kokila

Next Post

இனி சர்க்கரை நோயாளிகளும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்!.... 5 இனிப்பு வகைகள் இதோ!

Fri Feb 10 , 2023
இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயாளிகள், இனிப்பு சுவை குறைவாக கொண்ட பழங்கள், ஐஸ்கிரீம்களை சாப்பிடலாம். இதுகுறித்து தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் சரியான தூக்கமின்மை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது உள்ளிட்டவைகளே காரணமாகும். இந்தநிலையில், சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது, மிகவும் அவசியம். மற்றவர்கள் சாதாரணமாக […]

You May Like