உலகில் சில விசித்திரமான பழங்குடியினர் உள்ளனர், அவர்கள் நகரமயமாக்கல் மற்றும் நவீனத்துவத்திலிருந்து ஒதுங்கியே உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. அவர்களுக்கு எல்லைகள் பற்றி தெரியாது. நவீன மனிதன் எப்படி வாழ்கிறான் என்றும் தெரியாது. அந்த வகையில் வித்தியாசமான வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டோனி பழங்குடியின மக்கள் : மேற்கு பப்புவாவில் உள்ள பலியம் பள்ளத்தாக்கு டானி பழங்குடியின மக்களின் தாயகமாகும். அவர்கள் குறைந்தது 9,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் குகு யிமித்திர் பழங்குடியின மக்களுக்கு பாரம்பரியமாக இடது மற்றும் வலது என்பதற்கு வார்த்தைகள் இல்லை. இவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என திசையை மட்டுமே இடது வலதிற்கு பதிலாக பயன்படுத்தினர்.
மாஷ்கோ-பிரோ பழங்குடியின மக்கள் : பெருவில் உள்ள அமேசான் காடுகள் மக்களை விட்டு விலகி வாழும் பல பழங்குடியினரின் தாயகமாக உள்ளது. அதில் ஒன்றுதான் மாஷ்கோ-பிரோ. மக்கள் தொகை 600 முதல் 800 வரை இருக்கும். இப்போது இந்தப் பழங்குடியின மக்கள் வெளியாட்களை அதிகம் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். அவர் அடிக்கடி அரசாங்க சோதனைச் சாவடிகளில் நின்று மக்களிடம் உணவு கேட்பது அல்லது ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு சிக்னல் கொடுப்பது போன்றவற்றைக் காணலாம். அவர்களின் நிலத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகின்றன, சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சண்டையிடுகிறார்கள்
ஜும்மா பழங்குடியின மக்கள் : பங்களாதேஷின் ஜும்மா பழங்குடியின மக்கள் விவசாயம் செய்யும் முறை மிகவும் வித்தியாசமானது. இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு முன்னர் தாங்கள் இருந்த இடத்தில் நிலத்தில் வெவ்வேறு பயிர்களை கலவையாக விதைக்கிறார்கள். இவர்கள் திரும்ப அந்த இடத்திற்கு வரும் பொழுது ஒரே நிலத்தில் எல்லாவித தாவரங்களும் வளர்ந்திருக்கும்.
பப்புவா பழங்குடியின மக்கள் : மேற்கு பப்புவாவில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் பாரம்பரியமாக ஜென்டாருஸ்ஸா என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடித்து வருகின்றனர். இது கருத்தடையை ஏற்படுத்துமாம். ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை இந்த தாவரத்திலிருந்து தயாரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பொலிவியா மற்றும் ஈக்வடார் : மலேரியா உலகின் மிக கொடிய நோய்களில் ஒன்றாகும். சின்கோனா மரங்களின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் குயினின் மலேரியாவை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. இந்த குயினின் முதன்முதலில் பெரு, பொலிவியா மற்றும் ஈக்வடார் போன்ற பழங்குடியின மக்களால் தசையை தளர்வடையச் செய்ய மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்பட்டது.
Read more:எப்பவுமே வேக வேகமா சாப்பிடுவீங்களா..? இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும்னு தெரியுமா..?