fbpx

ராணியாருக்கு மரியாதை செலுத்த விதிமுறைகள் ….யார் , எப்போது மரியாதை செலுத்த அனுமதி ?

இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, ஊடகங்கள் , விளையாட்டுத்துறைசை் சேர்ந்தவர்கள் இறுதியாக அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலி செலுத்தவருபவர்கள் ஒரு நொடி அல்லது 2 நொடியில் முடித்துவிட்டு வெளியேற வேண்டும். ஏனெனெனில் இரவு முழுவதும் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள் எனவே அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வாகனங்களை எங்கு நிறுத்த வேணடும் என கூறப்பட்டுள்ளது. எந்ததெந்த சாலைகள் மூடப்படும் என்பது பற்றியும் அந்த இடத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.

தங்கள் மொபைல்கள், குடை , பவர் பேங்க் போன்ற அத்தியாவசிய தேவைகளை தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். செல்போன் அரங்கத்திற்குள் சைலன்டில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு, புகைப்பிடிக்கும் பொருட்கள், விசில் , லேசர் பொருட்கள், பேனர்கள் , கொடி , மார்க்கெட்டிங் பற்றிய தகவல்கள் இவை எதையும் அந்த இடத்திற்குள் வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி கிடையாது. இன்று மதியம் வரை ஹோலி ரூட் ஹவுசில்உடல் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் , செயின்ட் கில்ஸ் சர்ச்சு்கு கொண்டு செல்லப்படும். புதன்கிழமை பங்கிங்காம் அரண்மனைக்கு கொண் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

புர்ஜ் கலிஃபாவில் ஒளிவிளக்கில் மிளிர்ந்த ராணியார்….ராணிக்கு மரியாதை செலுத்திய துபாய் ….

Mon Sep 12 , 2022
மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது. துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை செலுத்துவம் விதமாக மக்கள் ஒன்று கூடி மின்ஒளி கட்டிடம் அருகே கூடினர்.. உலகம் […]

You May Like