fbpx

திருச்சி பலூன் வியாபாரிக்கு நீதிமன்றக் காவல் …

திருச்சி மலைக்கோட்டை அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் மாநகரையே பரபரப்பாக்கிய பலூன் வியாபாரியை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஜவுளி கடை வாசலில் ஹீலியம் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் அனார் சிங் என்ற உத்தரபிரதேச வியாபாரி. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதே போல திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (13) என்ற சிறுவன் படுகாயம் அடைந்து திருச்சி மகாத்மாக காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது மட்டும் இன்றி 20 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிலர் சிகிச்சை பெற்றதும் வீடு திரும்பினர். சிலிண்டர் வெடித்ததில் மூன்று இரு சக்கர வாகனங்கள் , அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாகளும் நொறுங்கி சேதமடைந்தன. இதையடுத்து பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு 17ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.

Next Post

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள்..!! சூறாவளி காற்று... கனமழை...!! எச்சரிக்கும் வானிலை மையம்...!!

Tue Oct 4 , 2022
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் அக்.7, 8ஆம் தேதிகளில் திருச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு […]

You May Like