திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்க பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணை தேர்வு செய்தனர். சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டது. இருவரும் சரமாரியாக தகாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆடியோ விவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து விசாரணை மேர்கொள்ளப்படும், தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில்ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தா பிறகு சேட்டையாளர்களிடம் பேசிய சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் “எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். தம்பி போலத்தான் சூர்யா சிவா இதனை பெரிதுபடுத்த வேண்டும் என்று கூறினர்.

இந்த நிலையில் பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சிவா, 6 மாதங்களுக்கு கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ““தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் திரு சூர்யா சிவா மற்றும் திருமதி டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர். நடவடிக்கை நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல் நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம். பெண்களை பொது மேடைகளில் கொச்சை படுத்துபவர்கள், ஆபாச் காணொளியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது (Burden of Leadership). ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும்” என அறிக்கையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.