fbpx

Trisha | கூவத்தூர் த்ரிஷா விவகாரம்..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Trisha | மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பாமக, தேமுதிக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க மறுத்து விட்டார். திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். பின்னர், தேர்தலுக்கு முன் கூட்டணிகளில் மாற்றம் வரலாம். கூட்டணிக்கு அதிமுக காத்திருப்பா என்ற கேள்விக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து கொண்டுதான் இருக்கின்றன என பதில் அளித்தார்.

2019ஆம் ஆண்டு தான் முதலமைச்சராக இருந்தபோதே தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் கூட்டணி அமைக்கப்பட்டது என்றார். பிரதமர் வேட்பாளர் இன்றி வெற்றிபெற முடியும். பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்திதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூவத்தூர் விவகாரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம். தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் கூட்டணி தர்மத்தை பார்க்க வேண்டி உள்ளது. தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளால் கூட்டணியில் பாதிப்பு ஏற்படுகிறது“ என்றார்.

Read More : Indians Trapped in War Zone | உக்ரைனுக்கு எதிராக போரிட மிரட்டும் ரஷ்யா..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்..!!

Chella

Next Post

மதுவால் மீண்டும் ஒரு மரணம்.! குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொலை.! மகன் வெறி செயல்.!

Wed Feb 21 , 2024
லக்னோவில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த வயதான தந்தையை, மகன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர், இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லக்னாவில் உள்ள இந்திரா நகரில் குஷி ராம் சைனி என்ற 70 வயது முதியவர், தனது மகனான ஹேமந்த் சைனியுடன் அவர்களது வீட்டின் தரை தளத்தில் வசித்து வந்தார். ஹேமந்த் […]

You May Like