நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா நடிக்கின்றார் என்ற செய்தி வேகமாக பரவிவருகின்றது.
இயக்குனர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரமான குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான சந்திப்பின்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் திரிஷா ஆகியோர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் தளபதி 67 படத்தில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன என கேட்டார். இப்பொழுது என்னிடம் பொன்னியின் செல்வன் – 1 பற்றி மட்டும் பேசுங்கள். எனக்கு பொன்னியின் செல்வன் படத்தை பற்றி மட்டும் இங்கு பேச வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்கள். என்று கூறினார்.
இருப்பினும் நான் தளபதி 67 ல் நடிக்கவில்லை என அவர் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு அந்த படம் பத்தி கேக்காதீங்க எனதான் அவர் சூசகமான தகவல் கூறியுள்ளார். எனவே இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கில்லி , ஆதி , திருப்பாச்சி , குருவி ஆகிய 4 படங்களில் விஜய்- திரிஷா இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்கள். இதில் 2 படங்கள் மாஸ் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் மெகா எதிர்பார்ப்பாக உள்ளது.