நடிகை தமன்னாவால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், கணவரை இன்ஸ்டாகிராமில் ஏன் ஃபாலோ பண்ணவில்லை என்பது பற்றியும் நடிகை ரம்பா ஓபனாக பேசியுள்ளார்.
இந்தியாவில் துவங்கிய கிச்சன் பிசினஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது கிளையை சமீபத்தில் கோயம்புத்தூரில் துவங்கியுள்ளார் நடிகை ரம்பா. இந்த விழாவில் பேசிய அவர், “கோவைக்கும் தனக்கும் இடையே உள்ள நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய முதல் படமான உழவன் திரைப்படம் கோவையில் தான் எடுக்கப்பட்டது. அப்போது, கோவை மக்கள் தன் மீது மிகவும் அன்பாக பார்த்து கொண்டனர்.
பாகுபலி படத்திற்கு பின்னர் நான் அப்படி எந்த ஒரு படத்தையும் விரும்பி பார்க்கவில்லை. நான் இப்போது வரும் படங்களில் நடித்தால் தன்னுடைய குழந்தைகள் கூட தன்னுடைய படத்தை பார்க்க மாட்டார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”தன்னுடைய கணவர் குறித்தும், தமன்னாவால் தங்கள் இடையே வெடித்த பிரச்சனை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய கணவர் விஷயத்தில் நான் ரொம்ப பொஸசிவ். அவரிடம் மட்டும் எனக்கான உரிமையை எதிர்பார்ப்பேன். என்னுடைய கணவர் இன்ஸ்டாகிராம் துவங்கியபோது அவர் என்னை தான் முதலில் பின்தொடர வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் எனக்கு முன் தமன்னாவை ஃபாலோ செய்தார்.
எனவே நான் இப்போது வரை என்னுடைய கணவரை ஃபாலோ செய்யவில்லை. அவரிடமே இதை கூறியுள்ளேன். அவர் மட்டுமே என்னை ஃபாலோ செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தற்போது வரை எங்கள் இருவர் மத்தியிலும் இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.