1894 முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனை செய்து வருகிறது. குழந்தைகளுக்கு டயபர் போடுவதால் வரும் எரிச்சல், தழும்பு, ராஷஸ் முதலியவற்றைத் தடுக்க இந்த பவுடர் தயார் செய்யப்பட்டது. குழந்தைகள் மட்டுமின்றி தாய்மார்களும், பெண்களும் இதை பயன்படுத்தினர். ஆனால் 1990 முதல், ஆஸ்பெஸ்டாஸ் கலப்படமான இந்த பவுடரைப் பயன்படுத்தியதால் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் கேன்சர் நோய் வந்துள்ளதாக பல்வேறு பெண்கள் வழக்கு தொடுத்தனர்.
பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்து வந்த நிறுவனம், அதன் திவாலாகும் நிலை கருதி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 22 வழக்குகள் தொடரப்பட்டது. அதில், ஒரு வழக்காக புற்றுநோயில் இறந்த பெண்ணின் வழக்கு விசாரணையில், டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 45 மில்லியன் டாலர் (ரூ.375 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்நிறுவன பொருள்களின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
Read More : பிஃஎப் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1,00,000 கிடைக்கும்..!!