fbpx

முறைகேடு வழக்கில் வசமாக சிக்கிய டெல்லி முன்னாள் முதல்வர்…! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.

இதைத் தொடர்ந்து அவரை மார்ச் 20-ம் தேதி வரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மணீஷ் சிசோடியாவை, ஏப்ரல் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு காவலில் வைக்க கால அவகாசம் கடந்த வாரம் முடிந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது சிபிஐ சிசோடியாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Vignesh

Next Post

பொதுமக்களே கவனம்...! இது போன்ற குளிர்பானம் தயார் செய்ய கூடாது...! அரசு அதிரடி உத்தரவு...!

Wed Apr 26 , 2023
தமிழகத்தில் உள்ள குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தைகுறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ குளிர்பானகடைகளில்‌, பரவலாக பொதுமக்களின்‌ நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில்‌ சாலையோர மற்றும்‌ நிரந்த வணிகம்‌ செய்யும்‌ வணிகர்கள்‌,பொதுமக்களுக்கு தரமான மற்றும்‌ பாதுகாப்பான குளிர்பானங்கள்‌, பழச்சாறுகள்‌ வழங்குதலை உறுதி […]

You May Like