fbpx

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த லாரி..!! 71 பேர் உயிரிழந்த சோகம்..!!

எத்தியோப்பியா ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கிராமப் புறங்களில் திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுக்கு செல்ல பேருந்து அல்லது வேனை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால், எத்தியோப்பியா நாட்டின் சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளுக்கு பதில் லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். லாரி மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும் மக்கள் இவ்வாறு பயணம் செய்கின்றனர்.

அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக லாரி ஒன்றில் 70-க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களிலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி, லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

Read More : கால்களில் இந்த அறிகுறி இருக்கா..? அப்படினா உங்கள் கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

While attempting to cross a river bridge, the driver lost control of the truck and unexpectedly overturned into the river, causing an accident.

Chella

Next Post

மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்!. மாரடைப்பால் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!. அதிர்ச்சி காட்சிகள்!

Tue Dec 31 , 2024
Cricketer collapses on the field!. Tragedy as he dies of a heart attack!. Shocking footage!

You May Like