Trump’s reciprocal tax: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘லிபரேஷன் டே’ (Liberation Day) உரையில் அறிவித்த ‘பரஸ்பர’ (reciprocal) இறக்குமதி வரிகளின் பட்டியல் குறித்த முழுவிவரங்கள் தெரிந்துகொள்வோம்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% அடிப்படை வரி (Baseline Tariff) விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படுகின்றன. டிரம்பின் புதிய வரி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% அடிப்படை வரி. சில நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு (சீனா, இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, வியட்நாம் மற்றும் பிற நாடுகள்). வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து கார்களுக்கும் 25% வரி. பரஸ்பர வரி” (Reciprocal Tariff) நடைமுறை ஆகியவை அடங்கும். அமெரிக்கா மீது எந்த நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு அல்லது அதிக வரியை அமெரிக்கா அந்த நாடுகளுக்கு விதித்துள்ளது. இது அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே சர்வதேச வர்த்தக போரை மீண்டும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் உலகளவில் பல்வேறு நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை பட்டியலிட்டு, “நெடுங்காலமாக, நமது நாடு கொள்ளையடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், “நெருங்கிய நண்பர்களும், எதிரிகளும் அமெரிக்காவை நீண்ட காலமாக ஏமாற்றி வருகின்றனர்” என்று கூறினார். இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் புதிய வரி கொள்கையை நீதிபடுத்துவதற்காக கூறப்பட்டதாக கருதப்படுகிறது. “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) விதிமுறையின் கீழ், அமெரிக்கா மீது எந்த நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு அல்லது அதைவிட அதிகமாக அமெரிக்கா அந்த நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனால், அமெரிக்காவின் இரும்புத் தொழிலாளர்கள், கார் தொழிலாளர்கள், விவசாயிகள், திறமையான கைவினை கலைஞர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். வெளிநாட்டுத் தலைவர்கள் எங்கள் வேலைகளைத் திருடியதை அவர்கள் வேதனையுடன் பார்த்தார்கள். வெளிநாட்டு மோசடிக் கும்பல்கள் எங்கள் தொழிற்சாலைகளை சூறையாடினர் என்று கூறினார்.
தொழிற்சாலை மற்றும் கார் தொழிலாளர்களுடன், அதே போல் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில், டிரம்ப் “வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாக உத்தரவை” (Executive Order) கையெழுத்திட்டு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு மீது பரஸ்பர வரிகளை (Reciprocal Tariffs) நடைமுறைப்படுத்தினார். அப்போது அதிபர் டிரம்ப், ஒரு போஸ்டரை காண்பித்து, அதில் உள்ள பரஸ்பர வரிகளை (Reciprocal Tariffs) பட்டியலிட்டார். இதில் சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26%, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விகிதங்களின் பட்டியல்:
அல்ஜீரியா: 30%
அர்ஜென்டினா: 10%
ஆஸ்திரேலியா: 10%
பஹாமாஸ்: 10%
பஹ்ரைன்: 10%
பங்களாதேஷ்: 37%
பொலிவியா: 10%
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா: 35%
போட்ஸ்வானா: 37%
பிரேசில்: 10%
புருனே: 24%
கம்போடியா: 49%
சிலி: 10%
சீனா: 34%
கொலம்பியா: 10%
கோஸ்டாரிகா: 10%
கோட் டி ஐவரி: 21%
டொமினிகன் குடியரசு: 10%
ஈக்வடார்: 10%
எகிப்து: 10%
எல் சால்வடார்: 10%
எத்தியோப்பியா: 10%
EU: 20%
பிஜி: 32%
கானா: 10%
குவாத்தமாலா: 10%
கயானா: 38%
ஹைட்டி: 10%
ஹோண்டுராஸ்: 10%
ஐஸ்லாந்து: 10%
இந்தியா: 26%
இந்தோனேசியா: 32%
இஸ்ரேல்: 17%
ஜப்பான்: 24%
ஜோர்டான்: 20%
கஜகஸ்தான்: 27%
கென்யா: 10%
லாவோஸ்: 48%
லெசோதோ: 50%
லிச்சென்ஸ்டீன்: 37%
மடகாஸ்கர்: 47%
மலேசியா: 24%
மொரீஷியஸ்: 40%
மொராக்கோ: 10%
மியான்மர் (பர்மா): 44%
நமீபியா: 21%
நியூசிலாந்து: 10%
நிகராகுவா: 18%
நைஜீரியா: 14%
வடக்கு மாசிடோனியா: 33%
நோர்வே: 15%
ஓமான்: 10%
பாகிஸ்தான்: 29%
பனாமா: 10%
பெரு: 10%
பிலிப்பைன்ஸ்: 17%
கத்தார்: 10%
சவுதி அரேபியா: 10%
செர்பியா: 37%
சிங்கப்பூர்: 10%
தென்னாப்பிரிக்கா: 30%
தென் கொரியா: 25%
இலங்கை: 44%
சுவிட்சர்லாந்து: 31%
தைவான்: 32%
தாய்லாந்து: 26%
டிரினிடாட் மற்றும் டொபாகோ: 10%
துனிசியா: 28%
துருக்கி: 10%
உக்ரைன்: 10%
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 10%
யுனைடெட் கிங்டம் 10%
உருகுவே: 10%
வெனிசுலா: 15%
வியட்நாம்: 46%.
தனது உரைக்கு பின்னர், டொனால்ட் டிரம்ப், குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்ட “de minimis” வரிச்சலுகையை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும், அதிகாரப்பூர்வ தகவலின்படி, அவர் செமிகண்டக்டர்கள் (semiconductors), மருந்துகள் (pharmaceuticals), மற்றும் முக்கிய கனிமங்கள் (critical minerals) மீது கூடுதல் வரிகள் விதிக்க திட்டமிட்டுள்ளார்.
டிரம்பின் பரஸ்பர வரிகள் நிதி சந்தைகளையும், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து நிலவிவரும் வர்த்தக ஒப்பந்தங்களின் மீது ஆதரித்து செயல்படும் வியாபாரங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. டிரம்ப் ஏற்கனவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 20% வரி விதித்துள்ளார்.
மேலும், இரும்பு (Steel) மற்றும் அலுமினியத்திற்கு (Aluminum) 25% வரி விதித்து, அதை மொத்தம் $150 பில்லியன் மதிப்புள்ள தொடர்புடைய உற்பத்திப் பொருட்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்த வரிகள் அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி திறன்களை மீண்டும் கொண்டு வரும் என்று ஆலோசகர்கள் கூறினர்.