தெலுங்கு திரையுலகத்தில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதான நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாருக்குப் பின்னர், ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தனர். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. பின்னர் செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த ஜானி மாஸ்டர் தன் வீட்டிற்கு சென்று தன் குழந்தைகளைக் கொஞ்சும் விடியோவை வெளியிட்டு, “இந்த 37 நாள்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. என் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் பிராத்தனையால் இன்று இங்கிருக்கிறேன். உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது. ஒருநாள் வெல்லும். என் குடும்பத்தினர் கடந்து வந்த இந்த காலகட்டம் என்றென்றும் என் இதயத்தை துளைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Read more ; சற்று நேரத்தில் தொடங்கும் தவெக மாநாடு..!! 19 தீர்மானங்கள் நிறைவேற போகுது..!!