பொதுவாக குளிர் காலம் வந்தாலே, சளி, காய்ச்சல், இருமல் என அனைத்தும் வந்துவிடும். குறிப்பாக, கக்குவான் இருமல் பலரை பாதிக்கும். இருமல் இடைவிடாமல், கட்டுப்படுத்த முடியாமல் வருவது தான், கக்குவான் இருமல். போர்டெடெல்லா பெர்டுசிஸ் எனப்படும் பாக்டீரியா தான் இந்த இருமளுக்கு காரணமாகிறது. இந்த வகை இருமல் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ஆனால், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பல மருந்துகள் சந்தையில் கிடைக்கும். ஆனால், அது நிரந்தர தீர்வு அளிக்காது. இதனால் இந்த கக்குவான் இருமலுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வைத்தியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த கக்குவான் இருமல் பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம், அசுத்தமான காற்றின் மூலம் பரவக்கூடியது. அந்த வகையில், தேன் இருமலை குறைக்க உதவும் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தேன் இருமலை குறைத்து நன்றாக தூங்க உதவும். இதற்க்கு நீங்கள் ஒரு டீஸ்பூன் தேனை அரை டம்ளர் நீரில் கலந்து குடித்தால் இருமல் குறையும். பூண்டும் நல்ல நிவாரணமாக இருக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும். இதற்க்கு நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு மென்று சாப்பிடலாம். அல்லது, பூண்டு பொடியாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.
நீங்கள் கக்குவான் இருமலை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சளில் உள்ள ஆன் டி வைரல் மற்றும் ஆன் டி பாக்டீரியல் மற்றும் ஆன் டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளது. மேலும், மஞ்சளில் இருக்கும் குர்குமின், கக்குவான் இருமலை கட்டுப்படுத்தும். இதற்க்கு நீங்கள், நீரை கொதிக்க வைத்து மஞ்சள் மற்றும் தேன் கலந்து காலையில் குடிக்கலாம். அல்லது, இரவு தூங்க செல்லும் முன், பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.
Read more: ஆள விடுங்கடா சாமி…. எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்…