fbpx

இழந்த பணம், சொத்துக்கள் திரும்ப கிடைக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.!?

ஒரு சிலர் வாங்கிய பணத்தை திரும்ப தர மாட்டார்கள்..சிலரோ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பார்கள். சிலர் சொத்துக்களையும், நகைகளையும் ஏமாந்திருப்பார்கள். இழந்த சொத்துக்களை மீட்கவும், கொடுத்த கடனை வசூலிக்கவும் சில பரிகாரம் உள்ளது அதை பார்க்கலாம்.

நமக்கு சேர வேண்டிய பணம், நகை, சொத்து போன்றவை மற்றொருவர் தராமல் நம்மை ஏமாற்றி விட்டால் திரும்ப பெறுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருப்பார்கள். ஒரு சிலர் நம்பிக்கை இழந்து முயற்சியை கைவிட்டும் இருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்க கண்டிப்பாக பலன் கிடைக்கும் வரை கைவிடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இழந்த பணம், சொத்து திரும்ப கிடைக்க பரிகாரம் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கே அமைந்துள்ள சிவபெருமானின் காவல் தெய்வமாக விளங்கும் சண்டிகேஸ்வரருக்கு வில்வமாலை படைத்து இழந்த பொருள் செல்வம், பணம் நகை எதுவாயினும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பொதுவாக சிவன் கோயிலில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரனுக்கு காது கேட்காது. அதனால் கைத்தட்டி கும்பிட வேண்டும் என்று பலரும் கூறியிருப்பதை கேட்டிருப்போம். ஆனால் அதில் உண்மை இல்லை. சிவனின் சொத்து ( மற்றவர்களின் செல்வம்) எதையும் நான் எடுத்து செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரனுக்கு கை காட்டிவிட்டு வரவேண்டும் என்பதே நம் முன்னோர்கள் நம்பிக்கையாக வைத்திருந்தனர். இதுவே காலப்போக்கில் கைதட்டி விட்டு வர வேண்டும் என்று மாறிவிட்டது.

மேலும் 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து காலையும், மாலையும் வராகி அம்மனுக்கு கருநீலத் துணியில் வெண்கடுகு நல்லெண்ணெய் விட்டு அதனை அகலில் வைத்து தீபம் ஏற்றி வர வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே இவ்வாறு தீபம் ஏற்றி வராகி அம்மனை மனம் உருகி வேண்டினால் இழந்த செல்வம், பணம், சொத்து, நகை என எதுவாயினும் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

Read more ; 65 வயதில், உடலுறவுக்கு ஆசைப்பட்டு முதியவர் செய்த காரியம்..

English Summary

Try this remedy to get your lost money and property back.!?

Next Post

மாரடைப்புக்கு மிகப்பெரிய காரணம்!. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!.

Fri Dec 6 , 2024
Heart attacks: பாமாயிலின் பயன்பாடு கடுமையாக அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த ஏன் தீங்கு விளைவிக்கிறது மற்றும் அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் பாமாயில் இறக்குமதி மற்றும் பயன்பாடு மலிவானது ஆனால் இது மிக ஆபத்தானது.முக்கியமாக மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடுகு, கடலை, தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது, இதன் […]

You May Like