சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு பலருக்கு வாழ்க்கையே வெறுத்து போயிருக்கும். இதை சாப்பிட வேண்டாம் அதை சாப்பிட வேண்டாம் என்று பார்பவர்கள் எல்லாம் அட்வைஸ் செய்வதுண்டு. அப்படி நீங்களும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு சலித்து போயிருந்தால் இனி கவலை வேண்டாம். உங்களுக்கான சிறந்த மருந்து பெரிய நெல்லிக்காய். பெரிய நெல்லிக்காய் பல சத்துக்களை கொண்டது. ஆனால் பலருக்கு நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி சரியாக தெரிவதில்லை. விலை குறைவு, ஆனால் அதனால் ஏறபடும் நன்மைகள் அநேகம். வைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் சாற்றினை வெறும் வயிற்றில் பருகினால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஆம், மேலும் நெல்லிக்காய் சாற்றை எடுத்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் பருகுவதால் அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளும் தீரும். அது மட்டும் இல்லாமல் உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களை கரைத்து இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்கும். மேலும், உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். வைட்டமின் ஏ, சி நிறைந்த இந்த நெல்லிக்காய் சாறு இரட்டை பார்வை பிரச்சனைகளை தடுத்து ஆரோக்கியமான கண்கள் மற்றும் கண்பார்வைக்கு உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காய் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி செய்கிறது.