fbpx

உடல் எடை அதிகரிப்பதை தடுக்க இந்த வெஜிடபிள் சூப் ட்ரை பண்ணுங்க!

பார்லி வெஜிடபிள் சூப் குடித்து வந்தால், உடல் எடை அதிகரிப்பதை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

பார்லி தூள் – 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)பார்லி அரிசி – 4 டீஸ்பூன் பீன்ஸ், கேரட் – தலா 50 கிராம் மிளகு தூள் – 3 டீஸ்பூன் வெங்காயத்தாள் – சிறிதளவு துளசி இலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.

Kokila

Next Post

அதிமுகவில் இணைந்த பிரபல காமெடி நடிகர்..!

Sat Aug 5 , 2023
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காமெடி நடிகர் சௌந்தர் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை அங்கீகரித்துள்ளதை அடுத்து அதிமுக முழுமையாக அவர் வசம் வந்துவிட்டது. இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கட்சியிலிருந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என்று அதிமுக […]

You May Like